கமநல திணைக்களத்துக்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நாட்டின் அரச தலைவர் ஒருவர், கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் மூன்று மணிநேரம் இந்த கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அனைத்துப் பிரிவுகளையும் கண்காணித்ததுடன், திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles