இவ்வருடத்துக்குள் புதிய அரசமைப்பு! வெளியானது விசேட அறிவிப்பு!!

” நிபுணர் குழு தயாரிக்கும் அரசமைப்பு வரைவு நகலானது இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பான அமையாது. நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்படும் வரைவு நகல் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றக்குழு அமைக்கப்படும். உரிய ஆய்வுகளின் பின்னரே அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எது எப்படி இருந்தாலும் இவ்வருடத்துக்குள் புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு அரசு தீவிரமாக செயற்படும். அப்பணிக்கு முன்னுரிமை வழங்கும்.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, புதிய அரசமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 1978 இல் இயற்றப்பட்ட அரசமைப்பே நாட்டில் தற்போது அமுலில் உள்ளது. அன்று முதல் இற்றைவரை சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசமைப்பொன்று இயற்றப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார். அந்த விடயத்துக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்படும்.

புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகலை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த நிபுணர்கள் குழுவின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இரு மாதத்துக்குள் அது தொடர்பான ஆவணம் அரசிடம் கையளிக்கப்படும். நிபுணர்கள் குழுவால் இவ்வாறு வழங்கப்படும் நகலே, இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பென சில கருதுகின்றனர். உண்மை அதுவல்ல.

நிபுணர்கள் குழுவால் புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் முன்வைக்கப்படும். நாடாளுமன்ற குழுவின் ஊடாக அதில் உள்ள ஓவ்வொரு விடயங்களும் விரிவாக ஆராயப்படும். உரிய வகையில் கவனம் செலுத்தப்படும். அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும். யோசனைகள் உள்வாங்கப்படும்.

புதிய அரசமைப்பு வெற்றியளிக்க வேண்டுமானால் அதற்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவு முக்கியம். இது விடயத்தில் கட்சிகளின் நேரடி பங்களிப்பும், பொது இணக்கப்பாடும் அவசியம். அப்போதுதான் அரசமைப்பு நீடித்து நிலைக்கும்.

இவ்வருடத்துக்குள் புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு அரசு தீவிரமாக முயற்சிக்கும். அந்த பணிக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்படும். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles