லுணுகலை சுகாதார பிரிவில் 28 பேருக்கு கொரோனா!

பதுளை, லுணுகலை சுகாதார பிரிவில் நேற்று 64 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில், 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கு என்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் லுணுகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதுடன் தேவையற்ற பிரயாணங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்த்து கொள்ளுமாறும் லுணுகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles