‘கொரோனா, டெங்குவுக்கு மத்தியில் மற்றுமொரு வைரஸ் காய்ச்சலும் பரவுகிறது’

கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு மேலதிகமாக, இந்த நாட்களில் மற்றுமொரு வைரஸ் காய்ச்சல் பரவுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

விசேடமாக மேல் மாகாணம் உள்ளிட்ட அதிக சனத்தொகையைக் கொண்ட பகுதிகளில் அதிக நோயாளர்கள் பதிவாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles