இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு – சுமந்திரன் தெரிவிப்பு

இந்தியா மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மீனவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் தொடர்ச்சியாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிதத்துடன் , அத்துமீறி நுழையும் மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினருக்கு உத்தரவு விட கோரியும் , 2017 ம் ஆண்டின 11ஆம் இலக்க இழுவை மடி தடை சட்டம் மற்றும் வெளிநாட்டு படகுகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்கு படுத்தும் 2018. ம் ஆண்டின் முதலாம் இலக்க சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கோரியும் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் , அதற்கு வடக்கு மீனவ சங்கங்களின் ஆதரவு வேண்டும் எனவும் மீனவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தரப்புகளுக்கு தாம் எப்போதும் பூரண ஆதரவை வழங்குவோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles