மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதா? தீர்மானம் இன்று

தேவையான அளவில் டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இருக்குமாயின் இன்றைய தினம் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சார சபையின் பேச்சாளர் பிரதி பொதுமுகாமையாளர் அண்ட்ரு நவமணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார உற்பத்திக்கான எரிபொருளை வழங்குவது தொடர்பில் எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் விசேட கலந்துரையாடல் இன்று (07) இடம்பெறுகிறது.

இதன்படி, மின் உற்பத்தி நிலையங்களுக்கு எதிர்வரும் வாரத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர், எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அது இன்றைய தினம் வரையிலேயே போதுமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆரம்பமாகியுள்ள அலுவலக வார நாட்களில் மின்சார கேள்வியானது 2,750 மெகாவோட்டிற்கும் அதிகளவில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறெனில், நுரைச்சோலை உள்ளிட்ட சகல மின் உற்பத்தி நிலையங்களையும் இயக்க வேண்டிய தேவையேற்படும் என மின்சார சபையின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles