நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாடளாவிய ரீதியில் இன்று (21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

அதேவேளை,தென் மாகாணத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியால மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles