ஜெனிவாவை வைத்து அனுதாப அலை திரட்டும் முயற்சியில் அரசு-மக்களே ஏமாற வேண்டாம் என்கிறது ஜேவிபி

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பை வழங்கிவிட்டு, அதனை வைத்து உள்நாட்டு அரசியல் நடத்துவதற்கும், அனுதாப அலையை திரட்டுதற்கும் அரசு அரங்கேற்றும் நாடகத்தை நாட்டு மக்கள் நம்பக்கூடாது.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அரநு மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஆரம்பத்தில் கொரோனாவைக் காரணம் காட்டினர். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ரஷ்யா, உக்ரைன் மோதலைக்காரணம்காட்ட முற்படுகின்றனர். அடுத்ததாக ஜெனிவா விவகாரத்தையும் பயன்படுத்துவார்கள்.
அதாவது தேசப்பற்றுள்ள அரசே நாட்டை ஆள்கின்றது, இது மேற்குலகத்துக்கு சகித்துக்கொள்ள முடியவில்லை, அதனால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்யப்படுகின்றது எனவும் பரப்புரை முன்னெடுப்பார்கள்.

இந்த சூழ்ச்சிக்காரர்களின் பிடிக்குள் பேராயர் சிக்கிவிட்டார் எனவும் முழக்கம் எழுப்புவார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை. தகவல்கள் கிடைத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியோர் மற்றும் தாக்குதலை திட்டமிட்ட சூத்திரதாரிகளுக்கு எதிராக நடவடிக்கையும் இல்லை. எனவே, நீதிக்காக போராடுவதற்கான உரிமை பேராயருக்கு இருக்கின்றது. உள்நாட்டில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் அவருக்கு சர்வதேசத்தை நாட வேண்டி வந்தது. இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்ததற்கான பொறுப்பை அரசுதான் ஏற்கவேண்டும்.

ஜெனிவாவில் அழுத்தங்கள் வந்தால் அதற்கான பொறுப்பையும் அரசு ஏற்கவேண்டும். ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற இடமளித்துவிட்டு, அதனை வைத்து உள்நாட்டில் அரசியல் நடத்தும் நாடகம் 10 ஆண்டுகளாக தொடர்கின்றது. இனியும் மக்கள் ஏமாறக்கூடாது.” – என்றார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles