பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டி நகரிலும் இன்று கையொப்பம் திரட்டப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உட்பட மேலும் பலர் மனுவில் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனர்










