ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

அதிகரித்துவரும் வாழ்க்கை செலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் வாழ்க்கை செலவுஅதிகரிப்பு அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை காணகோரி இவர்கள் மிரிஹானவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிரிஹான சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள ஹர்சா டி சில்வா ஹிருணிகா தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் துணிச்சலான சில பெண்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு வெளியே காணப்படுகின்றனர் – அவரிற்கான மனுவை கையளித்த பின்னர் அவர்கள் தமது ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் நெருக்கடியில் சிக்கிதுயருகின்றனர் என்பது அவரிற்கு தெரியுமோ தெரியாது என ஹர்சா டி சில்வா பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles