திருகோணமலை கிண்ணியாவில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்

திருகோணமலை கிண்ணியா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மஹாமாறு நடுவூற்று சுனாமி கிராமத்தில் உள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் நேற்று (07) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கிண்ணியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரும் கிண்ணியா 05 பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 33 வயதுடையவர்களாவர்.

Related Articles

Latest Articles