நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமையுடன் டீசல் வரிசை முடிவுக்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 20 ஆயிரம் டொன் எரிபொருள் கைவசம் உள்ளது. 32 ஆயிரம் டொன் எரிபொருள் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டுவருகின்றது.
நகரங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது. எனவே, வரிசை குறைவடைந்துவருகின்றது. வெள்ளிக்கிழமையுடன் வரிசை இருக்காது. பெற்றோலுக்கு தட்டுப்பாடு இல்லை. டீசலுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் தற்போது சரிசெய்யப்பட்டுவருகின்றது.” – என்றார்.










