பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் போராட்டம் இன்று கொழும்பு, மருதானையில் இடம்பெற்றது.


தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., நவ சமமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகங்கள் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
சாணக்கியன் எம்.பியும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
