60 ஒளடதங்களுக்கான விலைகளில் மாற்றம்

60 ஒளடதங்களுக்கான விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி சுகாதார அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒளடத இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்காகவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles