அப்பேவளை காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

அம்பேவளை காட்டுப்பகுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்தோடு தூக்கில் தொங்கிய நபர் ஒரு இராணுவ சிப்பாயாக இருப்பதற்கான ஒரு சில ஆதாரங்கள் இருந்துள்ளன.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கௌசல்வா

Related Articles

Latest Articles