சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சினால் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எரிபொருள் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிய்யில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
