சர்வக்கட்சி மாநாட்டால் பயன் கிட்டுமா? அநுர விளக்கம்

” அரசியல் அழுத்தங்களை சமாளிப்பதற்காக நடத்தப்படும் சர்வக்கட்சி மாநாடுகளில் எவ்வித பயனும் இருக்காது. எனவே, உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இது விடயத்தில் ஜே.வி.பி. உறுதியான முடிவை எடுக்கும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்வரும் 23 ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு இடம்பெற உள்ளதெனவும், அதில் பங்கேற்குமாறும் எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் இதற்கு முன்னரும் சர்வக்கட்சி மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. தேநீர் அருந்துவதற்காகவும், ஒன்றாக இருந்து அரட்டை அடிப்பதற்காகவுமே அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. உரிய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே, இம்முறை மாநாட்டுக்கு முன்னர் தரவுகள், தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். இம்மாநாட்டில் உண்மையான நல்ல நோக்கம் உள்ளதா என்பதை ஆராய்ந்துவருகின்றோம். உரிய தகவல்கள் கிடைப்பில் நாமும் பங்கேற்று, யோசனைகளை முன்வைப்போம்.” – என்றார் அநுர.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles