கடதாசி தட்டுப்பாடு-தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல்

கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் இறுதி தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, 6, 7, 8ம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 4, 9, 10, 11ம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் தௌிவுபடுத்தி, அனைத்து வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் விசேட கடிதமொன்றை மாகாண கல்வி பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் அனுப்பி வைத்துள்ளார்.

இதனடிப்படையில், மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் வினாத்தாள்களுக்கு அமைவாக, தவணைப் பரீட்சையை நடத்த முடியுமான அனைத்து பாடசாலைகளிலும் பரீட்சை அட்டவணைக்கமைய பரீட்சைகளை நடத்த முடியும்.

பரீட்சைகளை நடத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் பாடசாலைகளில், வினாத்தாள்கள் மற்றும் பரீட்சை அட்டவணை என்பனவற்றை பாடசாலை மட்டத்தில் தயாரித்து பரீட்சைகளை நடத்த முடியுமென குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 04, 09, 10, 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகளை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் நடத்தவும் மேல் மாகாண கல்வி பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles