இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இராஜினாமா!

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா, தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல் உள்ளது என்பதால், கடந்த மாதத்தில் இருந்து அமைச்சு பக்கம் நிமல் லான்சா செல்லாது இருந்தார்.

இந்நிலையிலேயே இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Related Articles

Latest Articles