மக்கள் எழுச்சியை வன்முறையாக மாற்றியது யார்?

தாங்கமுடியாத பொருளாதார சுமை, கடும் விலையேற்றம், வரிசைகளில் காத்துகிடக்க வேண்டிய பேரவலம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவற்றுக்கு தீர்வு வேண்டும் என கோரியும் மக்கள் நேற்றிரவு, மிரிஹானயில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறவழியில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களே பெரிதும் பங்கேற்றனர். கைக்குழந்தையுடன் தாய்மார் பங்கேற்ற படங்களும் வெளிவந்திருந்தன. போராட்டத்தின்போது தள்ளுமுள்ளுகளும் இடம்பெற்றன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் தண்ணீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் அடிப்படைவாதிகளே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர் என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படைவாதிகள் யாரென்பதை அரசு அடையாளப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்கள் போராட்டத்தை வன்முறையாக மாற்றும் விதத்தில் சொத்துகளுக்கு சேதம் விளைவித்து, அது தொடர்பில் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் தரப்பு யாரென்பது மக்களுக்கு புரியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Latest Articles