அமைச்சரவை இராஜினாமா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை  இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டு, இராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய புதிய அமைச்சரவை நியமிக்கப்படும். அந்த அமைச்சரவை இடைக்கால சர்வக்கட்சி அரசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமரைதவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் பதவி துறக்கும் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர் என தினேஷ் குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களுடன் ஜனாதிபதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (04) சந்திக்கவுள்ளார்.

Related Articles

Latest Articles