ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்தப்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மலையகப் பல்கலைக்கழகம், தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம், உதவி ஆசிரியர் நியமனம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.










