இலங்கையைச் சேர்ந்த மேலும் மூவர் அகதிகளாக, இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் நெருக்கடினை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் இருந்து 39 இலங்கை தமிழர்கள், தமிழகத்திற்கு அகதிகாளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை தமது இரு பிள்ளைகளுடன் தனி ஒரு பெண்ணாக குடும்ப தலைவி தனுஷ்கோடி சென்றுள்ளார்.
மட்டகளப்பு மாவட்டம் திமிலத்தீவு பகுதியை சேர்ந்த வாசினி (37), அவரது பதினொரு வயது மகள் நைனிக்கா மற்றும் நான்கு வயது மகன் ரங்கீசன் ஆகியோரே இவ்வாறு புலம்பெயர்ந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார், இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 42 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
