சாதாரண பெரும்பான்மையையும் இழக்கும் கட்டத்தில் அரசு!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சீர்செய்வதற்கு சகல கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதுதொடர்பான கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதமர் ஒருவரையும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையையும் நியமிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுத் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இடைக்கால அரசொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமக்கும் மனசாட்சியின்படி தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என கடிதம் ஊடாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவர்கள் 13 பேரும் வெளியேறினால் அரசு, சாதாரண பெரும்பான்மையையும் இழக்க நேரிடும்.

Related Articles

Latest Articles