யாழ்ப்பாணம், தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பயணித்த கப் ரக வாகனம், ரயிலில் மோதி இன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வாகனத்தைச் செலுத்திச் சென்ற தந்தையும் மற்றுமொரு சிறுமியும் படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களும் உயிரிழந்துள்ளனர்.
மிருசுவில் பகுதியில் உள்ள வைத்தியசாலை முன்பாக இருக்கும் வீதிக் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
