ராஜபக்சக்கள் பதவி விலகாவிடின் 6 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

” ராஜபக்சக்களும் இந்த அரசும் உடன் பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி வீதிக்கு இறங்கி, கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, ராஜபக்சக்களை விரட்டும்வரை போராட்டம் தொடரும்.”

இவ்வாறு தொழிற்சங்க கூட்டமைப்புகளின் பிரதிநிதியும், ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க, தொழிற்சங்கங்களின் சார்பில், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் நேற்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசதுறை, அரசசார்பற்ற தனியார் துறை, பெருந்தோட்டத்துறை, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகள் கூட்டாக இணைந்தே இதற்கான நடவடிக்கையில் இறங்கின.

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள், மின்சார சபை தொழிற்சங்கங்கள், சுகாதார தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியர்சார் தொழிற்சங்கங்கள், தபால் துறைசார் தொழிற்சங்கங்கள், பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், வங்கிசார் தொழிற்சங்கங்கள் உட்பட மேலும் பல தொழிற்சங்கங்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

பொருளாதார மத்திய நிலையங்கள், தொழில் பேட்டைகள் என்பனவும் மூடப்பட்டிருந்தன. இதனால் நாடு நேற்று பகுதியளவு முடங்கியது என்றே கூறவேண்டும்.

வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி, இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசு பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அரச மற்றும் 50 வீதமான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்தது என்று தொழிற்சங்க பிரமுகர்கள் தெரிவித்தனர்.

” ராஜபக்ச குடும்பமும், இந்த கள்ள அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். மக்கள் தமக்கு தேவையான ஆட்சியை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். இல்லையேல் பதவியில் இருந்து விரட்டும் நடவடிக்கை 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். ஆட்சியாளர்களை ஏழு கடல்களை தாண்டிச்சென்றாலும் விடமாட்டோம், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீள நாட்டுக்கு கொண்டுவருவோம்.” – என்று வசந்த வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles