மின்வெட்டு குறித்த புதிய அட்டவணை இதோ…

ஜுன் 06 முதல் 12 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி ஜூன் 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாளாந்தம் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கும் மின் விநியோகம் தடைப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, நாளை (05) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles