21 குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று கலந்தாய்வு!

21ஆவது திருத்தச்சட்ட மூலம் சம்பந்தமாக ஆராய்ந்து முடி வொன்றை எட்டுவதற்காக தமிழ்க் கட்சிகள் இன்று கூடவுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வவுனியாவில் கூடவுள்ளது.

அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் இன்று மாலை 6 மணிக்கு மெய்நிகர் வழியில் கூடிப் பேசவிருக்கின்றன.

முன்னதாக, முன்மொழியப்பட்ட அரசமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலம் சம்பந்தமாக கலந்துரையாடுவ தற்காக தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி,
தமிழ்த் தேசியக் கட்சி ஆகியன மெய்நிகர் வழியில் கூடிப் பேசியிருந்தன.

இதன்போது, தற்போது அரசமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் குறித்து
தமிழர் தரப்பு விசேட கரிசனை செலுத்த வேண்டுமா, அதில் எவ்விதமான வகிபா கத்தினைச் செய்வது என்பன தொடர்பில் அவை ஆராய்ந்திருந்தன.

இந்த நிலையில், பிரதமர் ரணில் தலைமையில் இரண்டாவது கூட்டம் நடத் தப்படவிருந்தமையால் அது நிறை வடையும் வரையில் தமிழ்க் கட்சிகளும்
தமது கூட்டத்தினைத் தாமதத்திருந்தன.

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்ப டுகின்றன என்பதை அவதானித்த பின்னர் அடுத்தகட்டமான செயற்பாடுகளை முன்னெடுப்பதென அப்போது தீர்மா னித்திருந்தன.

பிரதமர் ரணில் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சித் தலை வர்கள் 21 ஆவது திருத்தம் குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளநிலையில், தமிழ்க் கட்சிகளும் தமது இறுதியான நிலைப்பாட்டினை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியி ருக்கும் கூட்டமைப்பு எம்.பிக்களான சிறீ தரன், சுமந்திரன், சித்தார்த்தன் ஆகி யோரும் மன்னாரில் தங்கியிருக்கும் செல்வம் உட்பட ரெலோ உறுப்பினர்களும் நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கு பெறுவதற்காக இன்று பிற் பகலில் கொழும்பு பயணமாகிறார்கள்.

அந்த பயணத்தின் வழியில், இன்று பிற்பகல் 3 மணிக்கு வவுனியாவில் ஒன்று கூடி 21 ஆவது திருத்தம் குறித்து தங்க ளுக்குள் கலந்துரையாட ஏற்கனவே அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் செயலாளரும் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சிறீதரன், சுமந்திரன் போன்றோர் கொழும்பு பயணமாவார்கள். அதனால் இன்று மாலை 6 மணிக்கு ஏனைய தமிழ் கட்சிகள் சேர்ந்து மெய்நிகரில் ஒன்றுகூடி கலந்துரையாட ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் அவர்கள் பங்குபற்ற மாட்டார்கள் எனத்தெரிகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles