கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் சொத்துக்களில் 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டு நாட்டிற்குத் விரைவில் கிடைக்கப்பெறவுள்ளது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைகள் மீதான தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிலை ஏற்பட்டுள்ளது.
மீதமுள்ள நிதியையும் மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஈரான் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அதே வேளையில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதையும் ஈரான் ஜனாதிபதிமீண்டும் வலியுறுத்தினார்.
நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே அணுசக்தி நடவடிக்கைகள் இருக்கும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.










