ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து

நாடு இன்று இத்தகைய மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குவதற்கு பெருமளவு பொறுப்பேற்க வேண்டியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான். தனி மனிதராக அவர் இழைத்த தவறுகள்தான் இந்த நிலைமைக்கு முழுக் காரணம். அதனால் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும்.

அதேநேரம், நாடாளுமன்றமும் தனக்கான ஆணையை – தனித்துவத்தை – ஸ்திரத் தன்மையை – நம்பகத் தன்மையை – இழந்து விட்டது. அதனால் அதனை யும் கலைக்க வேண்டும். அந்த இரண்டையும் செய்தால்தான் நாம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வாய்ப்புக் கிட்டும்.-

இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் காட்டத்துடன் விவரித்தார் தமிழ் தேசியக் கூட் டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

நாடு முன்னெப்போதுமில்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தடவை யும் இந்த நாடாளுமன்றம் கூடும் போதும், இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான ஏதேனும் முன்னேற் றம் வராதா என்று மக்கள் எதிர்பார்க்கி றார்கள்.

கோட்டாபய ராஜபக்rவின் கடந்த ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்தீர்களானால் – இப்போது வாசிப்பீர் க ளானால் – நீங்கள் இன்றைய பட்டினி நிலையால் சாவதற்கு முன்னர், சிரித்து வயிறு வலித்துச் செத்து விடுவீர்கள். அதில் தான் ஆட்சிக்கு வந்தால் வருமான வரியை குறைப்பேன் என்று தொடங்கி, பல்வேறு வரிகளை நீக்குவது பற்றிய பட் டியலை வெளியிட்டு இருக்கிறார்.

பெறு மதி சேர் (வற்)வரியையும் தேசக் கட்டுமான வரியையும் 17 விதத்திலிருந்து வெறும் எட்டு வீதமாகக் குறைப்பேன் என்றார். பல்வேறு வரிகளை அடியோடு இல்லாமலாக்குவது பற்றி அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பெரும் வரி சலு கைகள், வரி நீக்கங்கள் ஆகியவற்றை தேர்தல் வாக்குறுதியாக அவர் அறிவித்திருக்கிறார். அவற்றை இங்கு நான் ஆவ ணமாகச் சமர்ப்பிக்கிறேன். இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளி யிடப்பட்டதும் இது குறித்துக் கவனமெ டுத்து 2019 ஒக்டோபர் 19ஆம் திகதி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி விட யத்தை மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார் அப்போதைய நிதி அமைச்சர் மங் கள சமரவீர. இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படுமானால் நாடு மிக விரைவில் லெபனான் மற்றும் வெனிசுலா நிலைமையை அடைந்து விடும் என்று அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் எச்சரித்தார் மங்கள சமரவீர. நாட்டின் துரதிஷ்டம் அது அப்படியே நடந் ததுள்ளது. மங்கள சமரவீரவுக்கு அதிர்ஷ் டம் போலும் இந்த மோசமான, அவல நிலையை நேரில் பார்ப்பதற்கு அவர் இங்கு இப்போது நம் மத்தியில் இல்லை.அத்துடன் விடய்ச்ம் முடியவில்லை. 2019 அக்டோபர் 30ஆம் தேதி கோட்டா பய ராஜபக்rவின் இந்த வரி விலக்குக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப் பட்டால் என்ன நடக்கும் என்பதை டுவீட்டர் செய்தி மூலம் மங்கள சமரவீர அம்பலப் படுத்தினார்.”கோட்டாபய ராஜபக்rவின் இந்த வரிவிலக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத் தப்பட்டால் இலங்கை வங்குரோத்து நிலை, கடன் மீளச் செலுத்த முடியாத கட் டம், கிரீஸ் நாட்டின் பாணியிலான கடன் நெருக்கடி ஆகியவற்றை நோக்கி கடுகதி ரயிலில் பயணிக்கும் நிலைமை ஏற்படும். வற் வரி கழிவு மட்டும் சுகாதாரம், பாது காப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான முழு செலவுக்கு சமமானதாக இருக்கும்’ – என்று அவர் எச்சரித்தார்.

அவர் எச்ச ரித்த படி அப்படியே நடந்து இருக்கின்றது. ஆகவே இந்த நிலைமை வரும் என்று யாரும் முன்னர் எதிர்பார்த்து எச்சரிவில்லை என்று கூறமுடியாது. இந்தத் திட்டத்தை கோட்டாபய ராஜபக்சஅறிவித்த போதே நாட்டின் நிதி அமைச்சர் இது மோசமான நிலைமையை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles