வாரத்திற்கு ஒருமுறை எரிபொருள் விநியோகிக்கும் முறை விரைவில்- எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் எரிபொருளை வாடிக்கையாளருக்கு விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதி நிலைமையை வலுப்படுத்தவும், 24 மணி நேர தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குதல் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை இதனூடாக சீர்செய்ய முடியுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜூலை முதலாவது வாரத்தில் இந்த அமைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Articles

Latest Articles