கடலில் மூழ்கி மூவரை காணவில்லை

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர் அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காணாமல் போன தாய்க்கு 55 வயது எனவும் அவரது மகனுக்கு 16 வயது எனவும் மருமகனுக்கு 22 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles