வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்து அவதானம் தேவை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்  வெளிநாட்டு வேலை ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் மோசடி தொடர்பான தினமும்  ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை  பெறுவதாக தெரிவிக்கின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்  பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இது குறித்து தெரிவிக்கையில்

 குறிப்பிட்ட நபர்கள் தனிப்பட்ட மட்டத்தில் ஒரு வியாபாரமாகவும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நாட்களில் மக்கள் எந்த நாட்டிற்கும் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளனர், இந்த போலி ஏஜென்சிகள் இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. . இவர்களிடமிருந்து பெரும் தொகை பணத்தை அறவிடுவதுடன்  ரசீதும் வழங்கப்படுவதில்லை.  மேலும்  இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாதவை.

‘எனவே, யாராவது வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் SLBFE இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதுடன் விலாசம்  மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தொடர்பு விவரங்களைப் பெறவும். இந்த முகவர் நிலையங்கள் சட்டபூர்வமானவையா இல்லையா என்பதைக் கண்டறிய SLBFE இலிருந்து நீங்கள் எப்போதுமே வழிகாட்டுதல்களைப் பெறலாம்இ’ என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உத்தரவாதமும் இல்லாமல் இத்தகைய தரப்புகளுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்றும் ரந்தெனிய கேட்டுக்கொண்டுள்ளார்..

‘இந்த போலி ஏஜென்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளஇ 24 மணி நேரமும் செயல்படும் ‘1989’ என்ற எண்ணை அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.  மேலும்  பணம் செலுத்துவதற்கு முன்இ இந்த நாடுகளுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு இந்த ஏஜென்சிகளுக்கு அனுமதி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் . அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் ஹோட்டல் தொழில் மற்றும் வீட்டு பராமரிப்பு சேவைகள் தொழில் போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் ஆனால் அதற்கு முன் இலங்கை சட்டத்தின் கீழ் உங்களுக்கு சேவையை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் என்றும் ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles