சரணடையமாட்டோம் – வீறுநடை போடுவோம்! மொட்டு கட்சி செயலர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டின் பெரும்பான்மை பலம்கொண்ட அரசியல் கட்சியாகும். அந்தக் கட்சியைக் கைவிட்டு வேறு கட்சியொன்றுடன்

இணைவதற்கு எந்தவித தீர்மானமும் கிடையாதென அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச , முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் வெற்றிகரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வேறுகட்சியுடன் இணைவதற்கு யோசிக்கும் வகையில் மூளைக் கோளாறு எதுவும் தமது கட்சியினருக்கு கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”  தமது கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவித அவசியமும் கிடையாது. அத்தகைய மூளைக்கோளாறு எதுவும் இல்லை.

பொதுஜன பெரமுன மற்றும் அதனோடு இணைந்த சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்துள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அதுதொடர்பில் நான் அறியவில்லை. பெரும்பான்மை பலமுள்ள கட்சியொன்றை விடுத்து அதிகாரமற்ற கட்சியொன்றுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles