9 ஆம் திகதி போராட்டத்துக்கு மலையக மக்களும் ஆதரவு!

“கோட்டா உடன் வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் நாளைமறுதினம் சனிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றிவளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருக்களுக்கு வந்து அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள், காலிமுகப் போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்துகொண்ட மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது:-

“நாடெங்கும் நாளைமறுதினம் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி முழுமையாக பங்கு பெறும். இதன்படி மலையகத் தோட்டங்களில் அன்றைய தினம் பணிகளில் ஈடுபடாமல், அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட வதிவாளர்களைத் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் கோருகின்றோம்.

அதேபோல் கொழும்பு உட்பட நகரங்களில் வர்த்தக நிலையங்களையும், அலுவலகங்களையும் மூடி, முழுமையாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படியும், தமது வேலைத்தள பணியாளர்களையும் அரச எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொள்ள இடமளிக்கும்படியும் அனைத்துத் தரப்பினரையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் கோருகின்றோம்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles