ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதத்தை நாளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதத்தை நாளை (12) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் அரசாங்க விவகாரங்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles