தெல்தெனியவில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி தப்பிச் செல்ல உதவினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் இருந்து வந்த பொலிஸ் குழுவினராலேயே அவர் கைது செய்யப்பட், விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, இக்கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மற்றொரு சந்தேகநபர் ஆகிய மூவரிடமும் தீவிர விசாரணை நடத்துவதற்காக, அவர்களை 48 மணிநேரம்பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நுவரெலியா நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.










