ரணில் பதவி விலகுவது சந்தேகமே – சாணக்கியன் தகவல்

ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில், விசேடமாக போராட்டகாரர்கள் முன்வைத்துள்ள யோசனையில் முதலாவது, (கோட்டபய ராஜபக்ச பதவி விலகல்), இரண்டாவது (ரணில்-அமைச்சரவை பதவி விலகல்) யோசனைகளை செயற்படுத்தாமல் மூன்று மற்றும் நான்காவது விடயங்களை செயற்படுத்த முடியாது.

பொதுஜன பெரமுன கட்சிக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள காரணத்தினால் எதிர்க்கட்சிக்கு எதனையும் செயற்படுத்த முடியாத நிலையில் போராட்டகாரர்களின் ஒன்றிணைவினால் ஜனாதிபதிக்கு பதவி விலக நேரிட்டுள்ளது.

கடந்த 30வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.
ஆகவே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில் போராட்டத்தினால் லிபியாவில் ஸ்தீரமான அரசாங்கத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதி பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் அதனை தடுக்க முடியாது.

ஆகவே அவர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் போராட்டத்தில் ஈடுப்படுதற்கு முன்னர், அதனை தடுக்கும் வகையில் அனைவரும் ஒன்று திரள வேண்டும். ஏனெனில் இவர் வெட்கமற்ற நபர் என்பதை நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளேன். இவரது வீடு எரிக்கப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது.

இருப்பினும் அச்சம்பவம் சந்தேகத்திற்குரியது. பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றால் பொதுஜன பெரமுனிற்கும் அது பிரச்சினையாக அமையும். அரசாங்கத்திற்குள் திருடர்கள் பலர் உள்ளார்கள்.

பொதுஜன பெரமுன தமது விருப்பத்திற்கமை பிரதமர், ஜனாதிபதி ஆகியோரை தெரிவு செய்ய கூடும், ஆகவே ஜனாதிபதி பதவி விலகலுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும். பதவியேற்றத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவது சாத்தியமற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles