கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு, வெடித்த சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

குறித்த வீட்டார் நேற்றுதான் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கி வந்துள்ளனர். அதனை பயன்படுத்தி இன்று சமைக்க முற்பட்டவேளையிலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை .
எனினும், நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களால், சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு முறையிடப்பட்டுள்ளது.










