34 கோடி ரூபா பெறுமதியான களவாடப்பட்ட நகைகளுடன் சந்தேக நபர் கைது

களவாடப்பட்ட 34 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று காலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி கோட்டையில் உள்ள தங்க நகை மற்றும் மாணிக்கக் கற்கள் விற்பனை நிலையத்தை உடைத்து அங்கிருந்த 34 கோடி பெறுமதியான தங்க நகைகள் இரு வாரங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காலி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

14 நாட்களுக்கு பின்னர் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து களவாடப்பட்ட தங்க நகைகள் மற்றும் மாணிக்கக் கற்களை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காலி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரத்ன வழங்கிய தகவல்களுக்கிணங்கவே சந்தேக நபர் தடல்ல பிரதேசத்திலிருந்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles