பதில் ஜனாதிபதி பதவியை உடன் துறக்கவும் – ரணிலுக்கு அழுத்தம்

பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய தன்னிச்சையாக பிரதமராக நியமித்தமை பொது மக்களைப் போராட்டத்திற்கு அழைத்த மிக முக்கியமான காரணியாக அமைந்தது. இதனூடாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் ஆகிய இருவருமே இராஜினாமா செய்து சர்வகட்சி அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குவது அவசியமானது.

மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்ந்து இதே கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதனைப் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜதந்திர சலுகைகளைப் பயன்படுத்தி, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றது மாத்திரமன்றி, மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை, சட்டப்பூர்வ இராஜினாமாஆவணங்களைச் சமர்ப்பிக்காமல், பதில் ஜனாதிபதியாக நியமித்திருப்பது பாரதூரமான செயலாகும். இதனால் மக்கள் மீண்டும் ஆத்திரமடைந்து போராட்டக்காரர்களுடன் சேர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், ரணிலின் நலனுக்கு துணைபோகும் வகையில் பல்வேறு சதிகார சக்திகளால் பாராளுமன்றத்தை தாக்கி, ஜனநாயகத்தின் ஒரே உச்ச நிறுவனத்தை குழிதோண்டிப் புதைத்து, சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான பின்னணியை உருவாக்கும் முனைப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles