” நோர்வூட் பிரதேச சபையின் இ.தொ.காவின் உறுப்பினர் சூசை எலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதேச சபை உறுப்பினர் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, எதிர்வரும் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.”

இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இதுபோன்ற செயல்களுக்கு இ.தொ.கா ஒருபொழுதும் அனுமதியளிக்காது என்பதோடு குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வூட்டில் உள்ள எரிவாயு வரிசைக்கு சென்று, அங்கு அடாவடியில் ஈடுபட்ட சூசை, நியாயம் கேட்ட ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
