தனியார் பஸ்ஸிலிருந்து எரிபொருள் கொள்ளை – நல்லத்தண்ணியில் சினிமா பாணியில் சம்பவம்

தனியார் பஸ்ஸிலிருந்து எரிபொருள் களவாடப்பட்ட சம்பவமொன்று மஸ்கெலியா, நல்லத்தண்ணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நல்லதண்ணி நகரில் உள்ள வக்சலா விருந்தினர் விடுதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் இருந்தே நேற்று முன்தினம் இரவு இவ்வாறு எரிபொருள் களவாடப்பட்டுள்ளது.

குறித்த பஸ்சுக்கு அன்றைய தினமே  டீசல் நிரப்பட்டுள்ளது. சுமார் 100 லீற்றர் டீசலை இரண்டு கேன்களில் கொள்ளையடித்து எடுத்துச்செல்லும் காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர் இன்று நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles