கெப் ரக லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில்

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ் பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் கெப் ரக லொறி ஒன்று பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கெப் ரக லொறி பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.

இந்த லொறியானது பூண்டுலோயா பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு மரணவீடு ஒன்றுக்கு  செல்வதற்காக 11 பேருடன் காலை பயணித்துள்ளது. பின்  மீண்டும் பூண்டுலோயா நோக்கி குறித்த லொரி நேற்று மாலை பயணிக்கையிலே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சாரதி உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles