‘ நாடாளுமன்றத்தின் முடிவு – மக்களின் தீர்ப்பு அல்ல’ – எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டு!

“மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து முன்னாள் பிரதமரையும் முன்னாள் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதன் பின்னர் எழுந்த மாற்று அணி முன்னைய நிலையை விட பாரதூரமானது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்ட மறுநாள் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் வகிபாகத்தை நிலைநாட்டும் அதேவேளையில், நாடாளுமன்றக் குழு முறைமையின் ஊடாக அரசின் சாதகமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக நான் சுட்டிக்காட்டினேன்.

சர்வகட்சிகளும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சி இதுவே. அதை விடுத்து சர்வகட்சி ஆட்சி என்பது அமைச்சுப் பதவிகள் பெற்று வரப்பிரசாதங்கள் சலுகைகளைப் பெற்று நாடக அரங்கேற்றங்களை மேற்கொள்வதல்ல.

நாடாளுமன்றத்தில் 225 பேரும் ஒரே மாதிரி என்ற நிலைப்பாடு பொருத்தமல்ல. அது 134 என்பதே சரியானது.

மக்கள் சக்திக்கு முன்னால் அரசு தோற்கடிக்கப்படும் என்பது உறுதி. அதன் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொது உடன்பாட்டை உருவாக்க வேண்டும்.

அனைத்து வெகுஜன தொழிற்சங்கங்க அமைப்புகள்,தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் திட்டவட்டமான புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும். அதற்காகத் தேசிய பேரவை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்த இடமளிக்கின்றேன். தேசிய சபைக்கு வரும் முற்போக்கான முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

நடந்தது ஒரு ஜனாதிபதித் தேர்தல் அல்ல. இடைக்கால ஜனாதிபதியை நியமிப்பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பே உண்மையில் இடம்பெற்றது. நாட்டில் மக்கள் அபிப்பிராயம் முற்றாகத் திரிபுபடுத்தப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தின் நிலைமை அவ்வாறானதாக இல்லை என்பதை முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் அதற்கு நாம் முகம் கொடுக்க முன்வந்தோம்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles