‘ஞானசார தேரரின் அறிக்கையை குப்பை கூடையில் போடவும்’ – ஹக்கீம் வலியுறுத்து!

” பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான செயலணி அறிக்கையை குப்பை கூடையில் போடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்க வேண்டும்.

இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த முற்பட்டவர்தான் ஞானசார தேரர். அவர் தலைமையில் அமைந்த குழுவின் அறிக்கையை குப்பை தொட்டியில் வீச நடவடிக்கை எடுக்கப்டுமா என்பதை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். ” – எனவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles