11 ஆம் திகதி நாடு திரும்புகிறார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரியவருகின்றது.

சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை வகித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் எழுச்சி வெடித்தது. கடந்த ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டது.

இதனையடுத்து ஜுலை 13 ஆம் திகதி நாட்டிலிருந்து ஜனாதிபதி வெளியேறினார். மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் புறப்பட்டார். ஜுலை 14 ஆம் திகதி இராஜினாமாக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் எதிர்வரும் 11 ஆம் திகதி நாடு திரும்புகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு செய்துகொடுக்கவுள்ளது.

Related Articles

Latest Articles