ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 192 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டன.

அந்தவகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் கடவுச்சீட்டு வழங்கல் 33 வீதத்தால் அதிகரித்து 5 இலட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் ஒரு இலட்சத்து ஆயிரத்து 777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அதில் 98 ஆயிரத்து 124 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

திணைக்கள வரலாற்றின்படி, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுக்கள் 2016 இல் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அந்த ஆண்டில் 6 இலட்சத்து 58 ஆயிரத்து 725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த ஆண்டின் ஏழு மாதங்களில் 5 இலட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமையால், 2016ஆம் வருடத்தின் சாதனை முறியடிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 701 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனர்.

எனினும், 2021ஆம் ஆண்டு முழுவதும் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காகச் சென்றுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles