100,000 மெட்ரிக் தொன் கச்சாய் எண்ணெய் கப்பல் இன்று இரவு கொழும்புக்கு

ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கன்சாய் எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று கொழும்பை வந்தடையும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை அதன் மாதிரி எடுக்கப்பட்டு தரம் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 120,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 23 முதல் 29ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களும் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles