புகையிரதத் திணைக்களத்தில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப பயணச்சீட்டு வழங்குவதில்லை என பயணிகள் சிலர் தெரிவித்தனர்.
இது குறித்து, ரயில்வே உதவிப் பொது முகாமையாளர் எஸ். பொல்வத்த கூறுகையில், பயணச்சீட்டுகளை அச்சிடத் தேவையான காகிதம் இல்லாததே இதற்குக் காரணம் என்றார்.
